விளையாட்டு

அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்

27/10/2021 07:08 PM

வியன்னா, 27 அக்டோபர் (பெர்னாமா) -- ஆஸ்திரியாவில் நடைபெற்று வரும் வியன்னா பொது டென்னிஸ் போட்டி. இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

உலகின் மூன்றாம் தர வரிசை விளையாட்டாளர் கிரிகோர் டிமிட்ரோவ்-வுடன், ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் களமிறங்கினார்.

முதல் சுற்றில் 6-3 என்ற புள்ளிகளில் கிரிகோர் வெற்றிப்பெற்றாலும், இரண்டாவது சுற்றில், 7-6 என்ற புள்ளிகளில் சிட்சிபாஸ் வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில், தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெற்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் எளிதாக வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

செர்பியாவின் பிலிப் கிராஜினோவிக்-வுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 6-2, 7-5 என்ற புள்ளிகளில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றிப் பெற்று, கடந்த 21 ஆட்டங்களில் தோல்வி அடையாத தனது சாதனையை அவர் தக்கவைத்துக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார்-வுடன்., அலெக்சாண்டர் ஸ்வெரேவ் களம் காண்பார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில், 6-4 என்ற புள்ளிகளில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறினார்.

அடுத்த சுற்றில், அமெரிக்காவின்பிரான்சிஸ் தியாஃபோ-வுடன் சிட்சிபாஸ் விளையாடவுள்ளார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)