பொது

ரோன் 97 ரக பெட்ரோல் லிட்டருக்கு 10 சென் விலை ஏற்றம்

27/10/2021 07:25 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) -- நாளை வியாழக்கிழமை, அக்டோபர் 28-ஆம் தேதி முதல், நவம்பர் 3-ஆம் தேதி வரையில், ரோன் 97 ரக பெட்ரோல் விலை ஏற்றம் கண்ட வேளையில் ரோன் 95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ரோன் 97 ரகப் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 சென் விலை ஏற்றம் கண்டு இரண்டு ரிங்கிட் 97 சென்னிற்கு விற்கப்படும்.

ரோன் 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர் இரண்டு ரிங்கிட் ஐந்து சென்னிற்கும், டீசல் இரண்டு ரிங்கிட் 15 சென்னிற்கும் விற்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)