தேசிய வர்த்தக பெருந்திட்டத்தின் ஐந்தாண்டுகால வியூகத் திட்டம்

25/10/2021 07:08 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில் இன்று தொடக்கி வைக்கப்பட்டிருக்கும் தேசிய வர்த்தக பெருந்திட்டத்தின் ஐந்தாண்டுகால வியூகத் திட்டம் அனைத்துலக அரங்கில் மலேசிய வர்த்தகத்தின் போட்டியாற்றலையும் அதன் நிலையையும் வலுப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

எட்டு வியூக உந்துதல்களையும் நாற்பது பரிந்துரைகளையும் கொண்ட இந்த பெருந்திட்டம் ஏற்றுமதி துறையை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பு மாற்றங்களை அடையாளம் காணும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதோடு வர்த்தக போட்டியாற்றலை மேம்படுத்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் அமலாக்கமும் வரவேற்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]