அரசியல்

மக்களவைத் துணைத் தலைவருக்கான தீர்மானம் ஒத்திவைப்பு

25/10/2021 03:11 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா)-- இன்று தாக்கல் செய்யப்படவிருந்த மக்களவைத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜபார்  முன் வைத்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு, மக்களவை உறுப்பினர்கள் ஏகமனதுடன் இணக்கம் தெரிவித்தனர்.

''விதிமுறை 90 (2)-இன் படியும், மக்களவைத் தலைவரின் இணக்கத்துடனும் ஆறாவது கூட்ட விதிமுறை அதிகாரத்தை நிறுத்துவதற்கான அதாவது, இன்றைய தீர்மானங்களுக்கான நிர்வகிப்பு விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதலாவது சட்டவிதியைப் போன்று மக்களவைத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை  நான் சமர்ப்பிக்கிறேன்.'' என்றார் அவர்.

இந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரும் எரிவாயு மற்றும் இயற்கைவள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ தாக்கியுடின் ஹசான் ஆதரவு தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி பதவி விலகிய டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட்டுக்கு பதிலாக புதிய மக்களைத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)