பொது

12-வது மலேசிய திட்டம்: வியூக தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்கள் அறிவிப்பு

27/09/2021 07:46 PM

கோலாலம்பூர், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- வியூக தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு 12-வது மலேசிய திட்டத்தில் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்திக்கிறது.  

ஆராய்ச்சி முதலீடுக்கான கடனுதவி மற்றும் வின்வெளி, மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறைகளின் மேம்பாடு, எதிர்கால தொழில்துறைக்கு சிறப்பு மையத்தை உருவாக்குவதல், அறிவுசார்ந்த சொத்து நிதி, உள்ளூர் நிறுவனங்களை மேம்படுத்த இலக்கவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்திற்கான  உதவித் திட்டங்களும் இதில் அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கின்றார். 

''12-வது மலேசிய திட்டத்தின் காலக்கட்டத்தில் சேவை துறையில் 5.2 விழுக்காடு, உற்பத்தி துறையில் 5.7 விழுக்காடு, விவசாயத்துறையில் 3.8 விழுக்காடு, சுரங்க துறையில் 2.6 விழுக்காடு கட்டுமானத் துறையில் 4.2 விழுக்காடு என்று சராசரி வளர்ச்சியை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

வளமான, நிலையான, மற்றும் முழுமையான மலேசிய குடும்பம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான 12-வது மலேசியத் திட்டத்தை, பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா 

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]