உலகம்

80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - ஸ்காட் மோரிசன்

27/09/2021 04:10 PM

வாஷிங்டன் டிசி, 27 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே கொவிட்19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் துரிதப் படுத்துமாறு, மாநில அரசாங்கங்களை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் கொவிட்19 சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதி செய்வது அவசியம் என்று ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டார்.

80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுத் தளர்வுகள் வழங்கப்படும் போது, அது ஆஸ்திரேலியாவுக்கு அரசு தரும் கிறிஸ்துமஸ் பரிசாக அமையும் என்று அவர் கூறினார்.

அந்நாட்டின் மக்கள் தொகையில் இதுவரை 41.5 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

கொவிட்19 நோயினால், ஆஸ்திரேலியாவில் இதுவரை 99,033 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 1,244 பேர் பலியாகியிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)