உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு 26.09.21

26/09/2021 04:48 PM

நெதர்லாந்து, 26 செப்டம்பர் (பெர்னாமா)--  நெதர்லாந்தில் புதிதாக அறிமுகப்பட்டிருக்கும் கட்டாய கொவிட் தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்நாட்டிலுள்ள உணவகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த விதிமுறை குறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர் ஒருவரை  இடைக்கால பிரதமரான மார்க் ரியுட்  நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.

லண்டன்

இங்கிலாந்தில் கனரக லாரி ஓட்டுநர்களின் பற்றாக்குறைப் பிரச்சனையைக் கையாள அவர்களுக்குத் தற்காலிக விசா வழங்கும் திட்டத்தை இங்கிலாந்து அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து முழுவதும் எரிப்பொருள் குறைவுக்கு இட்டுச் சென்ற ஓட்டுநர் பற்றக்குறைக்கு இத்திட்டம் தீர்வாக அமையும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

எரிப்பொருள் தட்டுப்பட்டினால் அதிகமான வாகன ஓட்டுநர்கள் பெட்ரோலை நிரப்ப நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

அமெரிக்கா

அமெரிக்கா, மொண்டானா மாநிலத்தில் ரயில் தடம்புரண்டதில் குறைந்தது மூவர் பலியாகியிருப்பதுடன் சிலர் காயமடைந்திருக்கின்றனர்.

 இவ்விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

SEATTLE--லிருந்து CHICAGOவிற்கு பயணம் மேற்கொண்ட இந்த இரயில் சுமார் 147 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்தனர்.

ஷென்சன்

கனடாவில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த HUAWEI நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மீண்டும் சொந்த நாடான சீனாவிற்கு திரும்பி இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப MENG WANZHOU-ஐ கனடா போலீசார் கைது செய்திருந்தனர்.

எனினும், இவ்வாண்டு அமெரிக்கா அதன் கோரிக்கையை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் விடுதலைச் செய்யப்பட்டார்.

அதுமட்டுமின்றி சீனாவில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று கனடா பிரஜைகளும் விடுதலைச் செய்யப்பட்டிருக்கின்றனர்.

MENG WANZHOU-இன் விடுதலைக்குப் பின்னர் அம்மூவரும்  உடனடியாக விடுதலைச் செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

எனினும், அவ்விரு நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை என்று பெய்ஜிங் தெரிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)