பொது

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவி மற்றும் ஊக்கத் தொகைகளுக்கான முறை மாற்றம் செய்யப்படும்

20/09/2021 05:13 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை அமைச்சு, விவசாயிகளுக்கு வழங்கும் உதவி மற்றும் ஊக்க தொகைகளுக்கான முறையை உற்பத்தியிலிருந்து விளைச்சலுக்கு கட்டம் கட்டமாக மாற்றவிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், உதவி மற்றும் ஊக்கத் தொகைகளை உடனடியாக குறைக்கவோ அல்லது திரும்பப் பெறவோ தமது தரப்பு எண்ணம் கொண்டிருக்க வில்லை, என்று விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரொனால்ட் கியாண்டி தெரிவித்திருக்கிறார்.

விவசாயிகள் நெல் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை ஊக்குவிக்க விளைச்சலுக்கான உதவி மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்குவது தொடர்பில் தமது அமைச்சு நிதி அமைச்சுடன் நேரடியாகப் பேச்சுகளை நடத்தும் என்றும் அவர் கூறினார்.

நெல் மற்றும் அரிசி தொழில் துறையைத் தொடர்ந்து ஊக்குவிக்க, சட்டப்பூர்வ நெல் விதை ஊக்கத் தொகை, கூட்டரசு அரசாங்க நெல் உரத் திட்டம், நெல் உற்பத்தி ஊக்கத் தொகைத் திட்டம், மலை நெல் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி திட்டம், நெல் விலை உதவித் தொகை திட்டம் ஆகியவை தொடரப்படும் என்று ரொனால்ட் கியாண்டி மேலும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)