பொது

மாநிலங்களுக்கு இடையிலான பயணக் குமிழி; பரீசிலனைச் செய்யப்படும்

20/09/2021 05:01 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- மாநிலங்களுக்கு இடையிலான பயணக் குமிழியை அனுமதிக்கும் முடிவை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு பரீசிலனைச் செய்யும்.

இது தொடர்பில், தற்போது பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஶ்ரீ நென்சி சுக்ரி தெரிவித்திருக்கிறார்.

''இதுவே லங்காவி திட்டம் வெற்றியடைந்தால், நாங்கள் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அனுமதியளிப்போம். தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறோம். விரைவில் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அனுமதியளிக்கப்படும். அதிகமான மாநிலங்கள் நான்காம் கட்டத்தில் இருக்கின்றன,'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, லங்காவி தீவிற்குச் செல்ல வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு அனுமதியளிப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் அமைச்சுகளுடனும் தமது தரப்பு பேச்சுகள் நடத்தி வருவதாக நென்சி சுக்ரி தெளிவுபடுத்தினார்.

நடப்பு சுற்றுலாத் துறையின் சூழ்நிலையை மீட்டெடுப்பதில், உள்நாட்டுப் பயணிகளை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)