உலகம்

பிரான்சுடனான நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தம்; ஆஸ்திரேலியா தற்காத்திருக்கிறது

19/09/2021 05:22 PM

ஆஸ்திரேலியா, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- பிரான்சுடனான நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தம் கையாளப்பட்ட விதத்தை, ஆஸ்திரேலியா தற்காத்துக் கொண்டிருக்கிறது.

எனினும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடனான புதிய ஒப்பந்தம், பன்னாட்டு அரச தந்திர உறவிற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து பிரான்சிடம் பல மாதங்களாக பேசப்பட்டு வந்ததால், அவ்விவகாரம் முறையாக கையாளப்பட்டிருப்பதை, ஆஸ்திரேலியா சுட்டிக் காட்டியது.

2016-ஆம் ஆண்டு பிரான்சின் நவால் குழுமத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்ததை நிறுத்தி விட்டு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்தது எட்டு அணுசக்தி கொண்ட கப்பல்களை உருவாக்கும் திட்டத்தை ஆஸ்திரேலியா வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையினால் அதிருப்தியடைந்த பிரான்ஸ், வாஷிங்டன் மற்றும் கன்பேராவில் இருந்து தனது தூதர்களை மீட்டுக் கொண்டது.

ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால், பிரான்ஸ் ஏமாற்றமடைந்திருப்பதை தாம் புரிந்து கொள்வதாகவும், ஆஸ்திரேலியாவிற்கு லாபம் ஈட்டக் கூடிய சிறந்த முடிவை எடுக்கும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும், அதன் பிரதமர் ஸ்கோட் மொரிசன் தெரிவித்தார்.

இதனிடையே, ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு துரோதகத்திற்கு சமமானது என்றும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடான உறவில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் பிரான்ஸ் கூறியிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)