அரசியல்

எஸ்.ஓ.பி-உடன் மக்களவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது

14/09/2021 03:58 PM

கோலாலம்பூர், 14 செப்டம்பர் (பெர்னாமா)-- கொவிட்19 பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் மக்களவைக் கூட்டத் தொடர் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவும் நாடாளுமன்ற கட்டிடத்தில் செயல்பாட்டு தர விதிமுறை எஸ்.ஓ.பி கடைபிடிக்கப்பட்டது.

திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் தொடர்ந்து ஆர்.டி.கே எனப்படும் உமிழ்நீர் பரிசோதனையைக் கட்டாயமாக்குவது உட்பட சில எஸ்.ஓ.பி  பின்பற்றப்படுவதற்கு நேற்று மக்களவைச் செயற்குழு கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக மக்களவை தலைவர் டத்தோ அஸ்ஹார் அசிசான் ஹருன் கூறினார். 

''இரண்டாவது நாடாளுமன்ற வளாகத்தில் நுழைபவர்களுக்கான நடைமுறை நிர்வகிப்பு குறித்த வரைபடம். அதைத் தவிர்த்து, (கொவிட்-19 நோயாளியுடன்) நெருங்கிய தொடர்பில் இருந்ததால் கண்காணிப்பு உத்தரவில் இருக்கும் உறுப்பினர்கள், வாக்களிக்க வரும்போது பாதுகாப்பு உடை அணிந்து வர வாய்ப்பு வழங்கப்படும். இது கடந்த டிசம்பர் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது,'' என்று அவர் கூறினார். 

14ஆவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான மக்களவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று  செவ்வாய்க்கிழமை  அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரு சுவாச கவசங்கள் அணிவதோடு பேசும்போது அல்லது விவாதிக்கும்போது அதனைக் கழற்ற வேண்டாம் என்றும் தாம் நினைவுறுத்தியதாக டத்தோ அஸ்ஹார் அசிசான் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)