உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

17/06/2021 09:05 PM

நியூ யார்க், 17 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்கா, நியூ யார்க்கில் விழுக்காட்டு இளைஞர்களுக்கு குறைந்தது முதலாவது கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் அங்கு அமல்படுத்தப்படும் முக்கிய கட்டுப்பாடுகளுக்கு உடனடியாக தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

மளிகைக்கடை, உணவகங்கள், அலுவலகங்கள், உடற்பயிற்சி மையங்கள், கேளிக்கை நடவடிக்கைகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு நியூ யார்க்கின் சுகாதார மற்றும் சிறப்பு வழிக்காட்டிகளைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, சிட்னியில் ஒரு மாதத்திற்குப் பிறகு உள்நாட்டு மக்களிடையே மூன்று கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

60 வயதான நபர் ஒருவருக்கு எவ்வாறு இந்நோய்ப் பரவியது என்பது குறித்து தெளிவாக அடையாளம் காண முடியாத நிலையில் இவர் சில சமயங்களில் வெளிநாட்டு விமான பணியாளர்களின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவர், சுகாதார நெறிமுறைகளை மீறி இருக்கிறாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா

அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயைக் குணப்படுத்த, கடந்த வாரத்தில் புதிய மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு சில மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் முதல் நபருக்கு இந்த விலைவுயர்ந்த மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

70 வயதுடைய மார்க் அர்ச்சம்பால்ட் என்ற நபருக்கு இம்மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டிருக்கும் வேளையில் இன்னும் சுமார் 100 நோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்த பட்லர் மருத்துவமனை திட்டமிட்டிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)