உலகம்

நோபாளத்தில் கனமழை ; சிந்து பால்சோக் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது

17/06/2021 09:04 PM

காத்மண்டு, 17 ஜூன் (பெர்னாமா) -- நேபாளத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில், சிந்து பல்சவுக் மாவட்டம் மூழ்கியதோடு எழுவர் காணாமல் போயிருக்கின்றனர்.

சீனாவின், தீபட் வட்டாரத்தை எல்லையாகக் கொண்டிருக்கும் அம்மாவட்டத்தில், இரவு முழுவதும் பெய்த தொடர் மழையினால் மேளம் சீ ஆற்றின் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து, சில வீடுகள் மூழ்கி இருக்கின்றன.

இதனால், மேளம் சீ நகரிலுள்ள சிலர் தங்களின் உடமைகளுடன் உயர்வான இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதோடு, இராணுவ ஹெலிகாப்டர்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களை காப்பற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் கண்டாக் ஆற்றில் இணையும் நாராயணி ஆற்றின் நீர் மட்டம் அபாயக் கட்டத்தைக் கடந்திருப்பதால் அதன் அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே, புத்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பத்து பேர் உயிரிழந்திருப்பதோடு ஐவர் காயத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)