பொது

சமையல் எண்ணெய்யின் விலைத் தொடர்பான விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும்

17/06/2021 08:02 PM

குவந்தான், 17 ஜூன் (பெர்னாமா) -- மூன்று மற்றும் ஐந்து கிலோ கிராம் எடையிலான பாட்டில் சமையல் எண்ணெய்யின் விலைத் தொடர்பான விவகாரத்திற்கு கூடிய விரைவில் தீர்வுக் காணப்படும்.

நிதி அமைச்சு மற்றும், மூலப்பொருள், தோட்டத் தொழிற்துறை அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில், அவ்விவகாரம் குறித்த பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை KPDNHEP துணை அமைச்சர் டத்தோ ரசூல் வாஹிட் தெரிவித்திருக்கிறார்.

இன்று வியாழக்கிழமை பகாங், குவாந்தான் புக்கிட் கோ ஃபெல்டாவில் உள்ள D'MART கடையைப் பார்வையிட்டப் பின்னர் ரசூல் அதனை தெரிவித்தார்.

இதனிடையே, ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி ஜூன் 27-ஆம் தேதி வரையில் கேமரன் மலையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி.டி. காய்கறிகளின் விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது என்றும் இது தொடர்பான துறைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

காய்கறிகளின் விலைகள் திடீரென அதிகரிக்கும் சூழலை எதிர்நோக்கும் பயனீட்டாளர்கள் அமைச்சிடம் புகார் அளிக்குமாறும் ரசூல் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)