பொது

தனிப்பட்ட கொவிட்-19 எஸ்.ஓ.பியை உருவாக்க பல்கலைக்கழகத் தரப்பு அனுமதிக்கவில்லை

15/06/2021 08:21 PM

கோலாலம்பூர், 15 ஜூன் (பெர்னாமா)  --  தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவிலிருந்து, தனிப்பட்ட கொவிட்-19 எஸ்.ஓ.பி மற்றும் விதிமுறைகளை உருவாக்க பல்கலைக்கழகத் தரப்பினர் அனுமதிக்கப்படவில்லை.

உயர்கல்வி அமைச்சும் எம்.கே.என்னும் வெளியிட்ட அனுமதி மற்றும் எஸ்.ஓ.பிக்கு உட்பட்டே பல்கலைக்கழகத் திட்டங்களும் பயிற்சிகளும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதை உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் சுட்டுக் காட்டினார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கும் செலுத்தப்படாதவர்களுக்கும் இடையில் எந்தவொரு வேறுபட்ட விதிமுறைகளையும் எம்.கே.என் கொண்டிருக்கவில்லை என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

அதே வேளையில், நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்.

குறிப்பாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடரப்படுவதையும், கொவிட்-19 காலகட்டத்தில், மாணவர்கள் கல்வியில் பின் தங்கி விடாமல் இருப்பதையும் பல்கலைக்கழகங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று டாக்டர் நோராய்னி கூறினார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)