பொது

பி.கே.பி: தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தால் எஸ்.ஓ.பி-யில் தளர்வு வழங்கப்படலாம்

13/06/2021 05:46 PM

ஜோகூர் பாரு, 13 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் கொவிட்-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் குறைவாக பதிவாகினால் மட்டுமே ஜூன் முதலாம் தேதி முதல் அமலில் இருக்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி-யின் செயல்பாட்டு தரவிதிமுறை, எஸ்.ஓ.பி அமலாக்கத்தை அரசாங்கம் மறுஆய்வுச் செய்யும்.

ஆனால், அது பி.கே.பி முழுமையாக நிறைவடையும் என்பதற்கு அர்த்தமாகாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர் பாருவிலுள்ள மலேசிய இராணுவ படையின் தற்காலிக மருத்துவமனையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனைத் தெரிவித்தார்.

தினசரி சம்பவங்களை நான்காயிரத்திற்கு குறைப்பதற்கு உதவும் சில நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு வரும் தேசிய பாதுகாப்பு மன்றம், எம்.கே.என் கூட்டத்தில் பரிந்துரை செய்யவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]