பொது

அவசர கால நிலை; மாமன்னரே முடிவெடுப்பார்

12/06/2021 08:03 PM

கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா) -- ஆகஸ்ட் முதலாம் தேதி நிறைவடைய விருக்கும் அவசரகால நிலையை நீட்டிப்பது அல்லது அதனை நிறைவுச் செய்வது, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷாவை பொறுத்ததாகும்.

ஆகவே, இது தொடர்பில் எந்தவொரு விவகாரமும் எழுப்பப்படக் கூடாது என்று, நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பிரிவுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹஸ்சான் தெரிவித்திருக்கிறார்.

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அதன் பரவும் விகிதத்தைக் குறைப்பதற்கும், குறிப்பிட்ட நடவடிக்கையில், அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு காக்கப்படுவதை உறுதிச் செய்வதில் முக்கியத்துவம் வழங்கப்படும்.

அதனால், அவசரகால நிலைக் குறித்த எந்தவொரு முடிவு எடுப்பது தொடர்பில், மாமன்னருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் பாதுகாப்பு, சமூக அம்சம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டப் பின்னர், அந்த ஆலோசனை வழங்கப்படும் என்றும் தக்கியுடின் தெரிவித்தார்.

-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]