பொது

கொவிட்-19: இன்று பாதிக்கப்பட்டவர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்

11/06/2021 08:13 PM

புத்ராஜெயா, 11 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில், இன்று கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அப்பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி இருக்கிறது.

நண்பகல் 12 மணி வரையில், 6,849 புதிய சம்பவங்கள் பதிவாகிய வேளையில் 7,749 பேர் அந்நோயிலிருந்து குணமடைந்திருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகிய புதிய சம்பவங்களில், 6,845 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் எஞ்சிய நான்கு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

மருத்துவமனையில், சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 78,864 ஆக பதிவாகி இருக்கிறது.

இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 912-ஆக அதிகரித்திருக்கும் நிலையில் 458 பேருக்கு சுவாச உதவி கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

அதோடு தினசரி மரண எண்ணிக்கையும் தொடர்ந்து இரண்டு இலக்கமாக பதிவாகி இன்று மேலும் 84 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]​​​​​​​