பொது

சாலை தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர் புக்கிட் அமான் இயக்குநர்கள்

13/05/2021 04:01 PM

கோலாலம்பூர், 13 மே (பெர்னாமா)-- நோன்பு பெருநாளின் முதல் நாளில் புக்கிட் அமான் அரச மலேசிய போலீஸ் படையின் தலைமையகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள், கிள்ளான் பள்ளதாக்கில் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றிவரும் உறுப்பினர்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஜாலான் டூத்தா டோல் சாவடி, லோ செந்தோசா, ஜாலான் செராஸ் மற்றும் கூட்டரசு நெடுஞ்சாலை ஆகிய இடங்களுக்கு அவர்கள் வருகையை மேற்கொண்டனர்.

குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தூ ஹுசீர் முகமட், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ரசாருடின் ஹுசேன், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதித் துறையின் சிறப்பு நடவடிக்கை படை துணை இயக்குநர் டத்தோ மாஸ்தோர் முகமட் அரிஃப் மற்றும் வணிக குற்றப் புலனாய்வுத்துறை துணை இயக்குநர், டத்தோ எஸ். சசிகலா தேவி ஆகியோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டிருக்கும் உறுப்பினர்களை பார்வையிட்டனர்.

-- பெர்னாமா