உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு 12/05/21

12/05/2021 06:53 PM

புதுடெல்லி, 12 மே (பெர்னாமா) -- இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொவிட்19 நச்சுயிரி 44 நாடுகளுக்குப் பரவியிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் பரவி வரும் B.1.617 வகை உருமாறிய கொரோனா நச்சுயிரி, மற்ற நச்சுயிரிகளைவிட வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டது.

பிரேசில்

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்ததால் அந்த தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு பிரேசில் தடை விதித்திருக்கிறது.

தடுப்பூசி செலுத்தப்பட்டதினால் அந்த 35 வயதான கர்ப்பணி பெண்ணுக்குப் பக்கவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேபாளம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொவிட்19 நோயினால் நேபாளத்தில் 9,483 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 255 பேர் பலியாகியிருக்கின்றனர்.

கொவிட்19 நோய் பரவல் தினசரி அதிகரித்து வருவதால், அமலில் இருக்கும் ஊரடங்கு மே 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

காசா

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவுறுத்தியிருக்கிறது.

காசா

காசா மற்றும் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அங்கே இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

-- பெர்னாமா