விளையாட்டு

இ.பி.எல்: தகுதி இறக்கம் காண்கிறது ஃபுல்ஹம்

11/05/2021 07:28 PM

லண்டன், 11 மே, (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், பெர்ன்லியின் சொந்த அரங்கில் ஃபுல்ஹம் 2-0 என்ற கோல்களில் தோல்வி கண்டது.

இதன் வழி, புள்ளிப்பட்டியலில் 18-ஆம் நிலையில் இருக்கும் ஃபுல்ஹம் , தகுதி இறக்கும் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த பருவத்தில் சிறந்த அடைவுநிலையை பதிவு செய்வதில், ஃபுல்ஹம், தொடர்ந்து தோல்வி கண்டு வருகிறது.

இந்நிலை, அதற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதோடு, அடுத்து வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறது.

இன்று அதிகாலை நடைபெற்ற இவ்வாட்டத்தில், ஃபுல்ஹமின் தாக்குதல் மற்றும் தற்காப்பு அரண்கள் வலுவின்றி இருந்ததால், 14-வது இடத்தில் இருக்கும் பெர்ன்லி முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் தலா ஒரு கோலை அடித்து ஆட்டத்தை வெற்றிக்கொண்டது.

இதனிடையே, மென்செஸ்டர் யுனிடெட் கிளப்பின் தாக்குதல்டெடின்சன் கவானியின் ஒப்பந்தம் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பராகுவே நாட்டைச் சேர்ந்த 34-வயதுடைய அவர், ரெட் டடெவில்ஸ்சின் வெற்றிகளில் முக்கிய நபராக இருந்து வருகின்றார்.

2022 ஜூன் வரை, கவானி அக்கிளப்பில் தொடந்து விளையாடுவார் என்று மென்செஸ்டர் யுனிடெட் அறிவித்திருக்கிறது.

-- பெர்னாமா