உலகம்

வெளிநாட்டுச் செய்திகள் தொகுப்பு 11/05/21

11/05/2021 07:21 PM

லண்டன், 11 மே (பெர்னாமா) -- மே 17-ஆம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.

உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் விளையாட்டு தளங்கள் ஆகியவை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நேபாளம்

நேபாள நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் அந்நாட்டின் பிரதமர் கே.பி. ஷர்மா தோல்வியடைந்திருக்கிறார்.

இதில் பிரதமருக்கு ஆதரவாக 93 வாக்குகளும் அவருக்கு எதிராக 24 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அமெரிக்கா

அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு  ஃபைசர் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

அந்நாட்டில் கொவிட்19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இது முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

-- பெர்னாமா