உலகம்

கொவிட் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குத் தளர்வுகள்

06/05/2021 01:25 PM

புதுடெல்லி, 6 மே (பெர்னாமா)-- இந்தியாவில் கொவிட்19 நோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கொவிட்மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குத் தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

கொவிட்19 மருத்துவ பரிசோதனைகளை அதிகரித்து அதிகமான மக்கள் மருத்துவ  பரிசோதனையை மேற்கொள்ள இத்தளர்வு உதவும் என்று அந்நாட்டு அரசாங்கம் நம்புகிறது.

கொவிட்19 நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள்  மீண்டும்  கொவிட்19 மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என்று  அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இருப்பினும், புதுடெல்லி நகரில் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளன.

கொவிட்19 நோய் பரவலின் இரண்டாவது அலையினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியா, கூடிய விரைவில் மூன்றாவது அலையை எதிர்நோக்கும் என்று மருத்துவக் குழு எச்சரித்திருக்கிறது. 

இருப்பினும் இதனைச் சமாளிக்க ஏப்ரல் மாதம் தொடங்கி முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு லட்சத்து 12,618 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகிய நிலையில் 3,982 பேர் பலியாகியிருக்கின்றனர்.

-- பெர்னாமா