COVID–19 NEWS   Premises listed under 'HIDE' not COVID-19 clusters - Khairy | Worried over family's safety, student remains in campus to celebrate Aidilfitri | Commonwealth leaders' meeting postponed indefinitely due to COVID-19 | MCO: Don't enter Putrajaya for social, recreational activities - Police | MCO: Don't enter Putrajaya for social, recreational activities - Police | 
உலகம்

பாகிஸ்தான் பேருந்து விபத்து; 13 பேர் பலி

04/05/2021 09:39 PM

இஸ்லாமாபாத், 4 மே (பெர்னாமா)-- பாகிஸ்தானில் லாகூரிலிருந்து, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்த பயணிகள்  பேருந்து விபத்துக்குள்ளானதில்  13 பேர் பலியாகினர்.

ஹசன் அப்தல் என்ற இடத்திற்கு வந்தபோது ஏற்பட்ட இந்தக் கொடூர விபத்தில் மேலும் 25 பேர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, காயம் அடைந்தவர்களில் பலரின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

-- பெர்னாமா