பொது

கொவிட்19: உண்மையில்லாத தகவல்களைப் பகிர வேண்டாம்

21/04/2021 09:11 PM

புத்ராஜெயா, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மையில்லாத தகவல்களைப் பகிரவோ பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, கொவிட்-19 தடுப்பூசியைத் தொடர்புப் படுத்தி சுகாதார அமைச்சின் சில ஊழியர்கள் மரணமடைந்தாக கூறப்படும் போலிச் செய்தியைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அது முழுமை அடைந்த பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தேசிய மருந்தக சீரமைப்பு பிரிவு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இதுவரை கொவிட்-19 தடுப்பூசி காரணமாக  எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று அந்த பிரிவு தெரிவித்திருக்கிறது.

கொவிட்19 தடுப்பூசி குறித்த விளக்கங்களைப் பெற, பொதுமக்கள்  http://covid-19.moh.gov.my எனும் அகப்பக்கத்திலும் அல்லது 03-88810200/ 03-88810600/ 03-88810700 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா