விளையாட்டு

வெர்டெர் பிரேமனை தோற்கடித்தது ஆர்.பி லைப்சிக்

11/04/2021 04:54 PM

ப்ரெமன், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜெர்மனி பண்டெஸ்லீகா கிண்ண போட்டி குறித்த செய்தி.

நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், 4-1 என்ற கோல்கள் எண்ணிக்கையில் ஆர்.பி லைப்சிக், வெர்டெர் பிரேமனை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் 60 புள்ளிகளுடன் ஆர்.பி லைப்சிக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

ஆர்.பி லைப்சிக்-யின் முதல் மூன்று கோல்களும் முதல் பாதி ஆட்டத்திலேயே போடப்பட்டது.

23, 31 மற்றும் 40-வது நிமிடங்களில் அடிக்கப்பட்ட மூன்று கோல்களால், வெர்டெர் பிரேமன் வலுவிழுந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60-வது கிடைத்த பினால்டி வாய்ப்பை பயன்படுத்தி வெர்டெர் பிரேமன் தனக்கான ஒரே கோலை போட்ட வேளையில், இரண்டு நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை 4-1 என்ற நிலையில் ஆர்.பி லைப்சிக் முடித்து வைத்தது.

மற்றொரு நிலவரத்தில், பாயென் முனிக் மற்றும் யூனியன் பெர்லின் இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்று முடிவடைந்தது.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவடைய, இரண்டாம் பாதி ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பாயென் முனிக் ஒரு கோலை அடித்து முன்னனி வகித்தது.

அதனை தொடர்ந்து ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்கும் வேளையில், யூனியன் பெர்லின் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமநிலையில் முடித்து வைத்தது.

-- பெர்னாமா