விளையாட்டு

கொவிட்-19 தடுப்பூசி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களுக்கு கட்டாயமல்ல

10/04/2021 09:19 PM

கொலராடோ, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைப்பெற விருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களுக்கு, கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் போவதில்லை.

எனினும், விளையாட்டாளர்களுக்கு தடுப்பூசியைப் பெற்றுத் தருவதற்கான உதவியை தங்கள் தரப்பு வழங்கும் என்று, அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் செயற் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி சாரா இர்ஸ்லாண்ட் தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவில், எதிர்வரும் 19-ஆம் தேதி தொடங்கி 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைப்பெறும்  தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே பெரும்பாலான விளையாட்டாளர்களுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்று அக்குழு தெரிவித்திருகின்றது.

எனினும், இது கட்டாயமாக்கப்படாது. ஆனால், அதற்கு ஊக்குவிப்படும்.
 
எனவே, விளையாட்டாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்குச் செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அது கூறியிருக்கின்றது.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிலிருந்து 107 நாட்களுக்கு பின்னர், தொற்றுநோயின் நான்காவது அலையை எதிர்நோக்கும் ஜப்பானுக்குள் நுழைவதற்கு முன்னர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விளையாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களை அக்குழு கேட்டு கொண்டுள்ளது.

அக்கழுவின் ஆலோசனையை விளையாட்டாளர்கள் பின்பற்றுவதாகவும், சிலர் தடுப்பூசி பெறுவதற்கு தங்கள் பெயரைப் பதிந்து கொண்டுள்ளதாகவும் அந்த செயற்குழு தெரிவித்தது.

இருப்பினும், இந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து கவலை எழுந்துள்ளதாக இன்னும் சில விளையாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-- பெர்னாமா