உலகம்

தி.மு.க.வின் பிடிவாதம் கமலுக்கு சாதகமாகுமா?

06/03/2021 09:47 PM

சென்னை, 06 மார்ச் (பெர்னாமா) -- தி.மு.க. காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

30 தொகுதிகள் வரை சென்றால், திமுகவுடன் கூட்டணி. இல்லையே தனித்து போட்டியிடலாம் என்ற முடிவையும் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், இம்முறை களத்தில் குதிக்கும் நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துக்களும் தற்போது வெளியாயுள்ளன.

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரசுக்கு மக்கள் நிதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது என ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமையிலான மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

-- பெர்னாமா