பொது

ம.சீ.ச இளைஞர் பிரிவின் பொதுப் பேரவையில் எட்டு தீர்மானங்கள் தாக்கல்

06/03/2021 09:49 PM

கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) -- மசீச இளைஞர் பிரிவின் 56-வது பொதுப் பேரவையில் மொத்தம் எட்டு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கட்சி விவகாரங்கள் மற்றும் இளைஞர்கள், அரசியல், அரசாங்கம், பொருளாதாரம் மற்றும் கல்விப் பிரிவுகளை உள்ளடக்கி இந்த தீர்மானங்கள் நிறைவெற்றப்பட்டன.

10 மாநிலங்களைச் சேர்ந்த 10 பிரதிநிதிகளால் இந்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்ட பின்னர் 322 பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட்டது.

கோலாலம்பூரில் உள்ள மசீச கட்டிடத்தில் 51 உறுப்பினர்களுடன் நடந்த இந்த பொதுப் பேரவையில், இதர உறுப்பினர்கள் இயங்கலை வாயிலாகப் பங்கேற்றனர்.

மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில், வருமான வரி விகிதத்தை குறைக்கவும் அரசாங்கத்திடம் அவர்கள் பரிந்துரைத்தனர்.

அதோடு, திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளுக்கு இளம் தொழிலாளர்களுக்கு மானியங்களை வழங்குமாறு மசீச இளைஞர்கள், அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டனர்.

கொவிட்19 தொற்றுநோயைத் துடைத்தொழிப்பதிலும், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதிலும், அரசியல்வாதிகள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியது.

-- பெர்னாமா