BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

கொவிட்-19 தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அவசியமானது

28/01/2021 07:46 PM

கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியாவில் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் முக்கியமானது.

இந்த சோதனைகளின் வழியாக அதன் செயல்திறன் மற்றும் பயன்பாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது மட்டுமின்றி, அத்தடுப்பூசி மீதான பொதுமக்களின் எதிர்மறையான கருத்தையும் பயத்தையும் நீக்க முடியும் என்று நரம்பியல் நிபுணர், பேராசிரியர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹலிம் ஷா தெரிவித்திருக்கிறார்.

நாட்டிற்குள் கொண்டு வரப்படும் எந்தவொரு தடுப்பூசியும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மலேசிய அரசாங்கம் குறிப்பாக சுகாதார அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள ஐயங்களைத் தவிர்ப்பதற்கு கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகள் சரியான முறையில் செய்யப்பட வேண்டும் என்றும் டாக்டர் ஹலிம் ஷாவலியுறுத்தினார்.

அத்தடுப்பூசி குறித்து எதிர்மறையான கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதால், அம்மருத்துவ பரிசோதனை மிக அவசியம் என்றும் அவர் கருதுகின்றார்.

மலேசியர்கள் தற்போது மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் மீது முழு நம்பிக்கையை வைக்க வேண்டும், ஏனெனில் அப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் சிறந்து முடிவு அதுவாகும் என்றும் டாக்டர் ஹலிம் ஷா சுட்டிக் காட்டினார்.

நாடு முழுவதிலும் உள்ள 9 மருத்துவமனைகளில் 3,000 உள்நாட்டு தன்னார்வலர்களை உட்படுத்தி, கொவிட்-19 தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நேற்று புதன்கிழமை தொடங்கி 13 மாதங்களுக்கு மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா