உலகம்

இந்தியா விவசாயிகளின் டிரக்டர் பேரணி மீது 22 வழக்குகள் பதிவு

27/01/2021 08:18 PM

புது டெல்லி, 27 ஜனவரி (பெர்னாமா) -- இந்தியா புது டெல்லியில் விவசாயிகளின் டிரக்டர் பேரணி இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுடெல்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி புதிய விவசாய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புது டெல்லியின் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று ஒரு லட்சம் டிரக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர். மூன்று வழிகளில் பேரணி நடத்த புதுடெல்லி போலீஸ் அனுமதி அளித்த நிலையில் அங்கு நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

விவசாயிகளின் ஒரு குழுவினர் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லிக்குள் நுழைந்த போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு விவசாயிகளும் போலீசாரும் காயம் அடைந்தனர்.

போராட்டம் கடுமையானதில் அது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக புதுடெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை காலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழிந்த நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

--பெர்னாமா