BREAKING NEWS   Helicopter crash tragedy affects families of Malaysian Armed Forces, a big loss to the nation - PM Anwar | RMN helicopter crash: PM Anwar expresses condolences, prays the victims' families be given strength in time of tragedy | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | Agong saddened by RMN helicopter crash in Lumut, sends his condolences to victims' families | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | 
விளையாட்டு

ஆர்.பி.லைய்ப்ஸிக்கைத் தோற்கடித்தது மைன்ஸ்

24/01/2021 05:18 PM

ஜெர்மனி, 24 ஜனவரி (பெர்னாமா) -- சனிக்கிழமை நடைபெற்ற பண்டேஸ்லீகா கிண்ண ஆட்டம் ஒன்றில், 3-2 என்ற கோல்களில், மைன்ஸ், ஆர்.பி. லேய்ப்ஜிக்கைத் தோற்கடித்தது.

இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும், 35 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் ஆர்.பி. லேய்ப்ஜிக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

முதல் பாதி ஆட்டம் தொடங்கிய 14-ஆவது நிமிடத்தில், ஒரு கோலை அடித்து ஆர்.பி. லேய்ப்ஜிக் கோல் வேட்டையைத் தொடக்கி வைத்தது.

இருப்பினும், 23-ஆவது நிமிடத்தில், மைன்ஸ் தமது முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, ஆர்.பி. லேய்ப்ஜிக் மேலும் ஒரு கோலை அடித்து முன்னணி வகிக்க தொடங்கியது.

தொடர் முயற்சிகளால், 34-ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து மைன்ஸ் ஆட்டத்தை மீண்டும் சமப்படுத்தியது.

வெற்றி கோலை தேடும் வேட்கையில், இரு குழுக்களும் கடுமையாகப் போராடிய நிலையில், 49-வது நிமிடத்தில் தனது வெற்றி கோலை அடித்து, ஆட்டத்தை மைன்ஸ் தன் வசம் ஆக்கிக் கொண்டது.

-- பெர்னாமா