பொது

வங்கி கடன் ஒத்திவைப்பு தொடர்ந்து வழங்கப்படும்

18/01/2021 07:53 PM

கோலாலம்பூர், 18 ஜனவரி (பெர்னாமா) -- வங்கி கடன் ஒத்திவைப்பு மற்றும் கடனை திரும்பச் செலுத்துவதில் குறைப்பு ஆகிய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இதுவரை, வங்கியில் கடன் பெற்றிருக்கும் 13 லட்சம் பேர், கடனை திரும்பச் செலுத்துவதில் உதவி கோரி செய்யப்பட்ட தனிநபர் விண்ணப்பங்களுக்கு 95 விழுக்காடு அனுமதியும் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் செய்த விண்ணப்பங்களுக்கு 99 விழுக்காடு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

கடனைத் திரும்பச் செலுத்துவதில் உதவித் தேவைப்படுவோர், சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்புக் கொள்ளலாம் என்றும் டான் ஶ்ரீ முகிடின் குறிப்பிட்டார்.

இதனிடையே, கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் வெள்ளப் பேரிடரால் பாதிப்படைந்திருக்கும் தேசிய உயர்கல்வி நிதி கழகமான, பி.டி.பி.டி எனில் கடன் பெற்றவர்கள், மார்ச் 31-ஆம் தேதி வரையில் அவற்றை செலுத்துவதற்கான மூன்று மாதக் காலம் கடன் ஒத்திவைப்பை விண்ணப்பிக்கலாம்.

ஈ.பி.எஃப்-யின் i-Sinar திட்டம் மேலும் மேம்படுத்தப்படுவதோடு அதன் தொடர்பான கூடுதல் தகவல்களை, ஈ.பி.எஃப் கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

--பெர்னாமா