Thursday, 21 Jan 2021
14/01/2021 07:35 PM

புத்ராஜெயா, 14 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டில், கொவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து நான்கு இலக்கமாக பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணி வரையில், மூவாயிரத்து 337 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகிய வேளையில், இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 855-ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர்  டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகிய புதிய கொவிட்-19 சம்பவங்களில், 3,330 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும்.

எஞ்சிய ஏழு சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்று  டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்நோயினால், இன்று மேலும் 15 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 1,710 இப்பெருந்தொற்றிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.

இதனிடையே, புதிய நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், தீவிர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதுவரை, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 195 பேரில், 86 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க