Thursday, 21 Jan 2021
பொது
14/01/2021 03:26 PM

அலோர் ஸ்டார், 14 ஜனவரி (பெர்னாமா) -- கொவிட் பெருந்தொற்றுப் பரவலினால் கெடாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டப்பாட்டு உத்தரவு, பி.கே.பி.பி. காரணமாக அங்குப் பொங்கல் திருநாள் மிதமான அளவிலேயே கொண்டாடப்பட்டது.

தை மாதத்தின் முதல் நாளான இன்றைய நன்நாளில் காலை ஏழு மணி தொடங்கியே ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குப் பக்தர்கள் வரத் தொடங்கியது, பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்துள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின்போது இவ்வாலயத்தில் குறைந்தபட்சம் 400-க்கும் குறையாத பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொள்வது வழக்கமாகும் என்று ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் சுப்பிரமணியம் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், இவ்வாண்டு செயல்பாட்டுத் தர விதிமுறைக்கு உட்பட்டு குறைவான எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

''30 நாட்களுக்குத் தொடர்ந்து மார்கழி பூஜை நடத்தப்பட்டு வந்து, ஆலயத்தில் இன்று பொங்கல் கொண்டாடியுள்ளோம். எஸ்.ஒ.பி.-யைப் பின்பற்றி ஏறக்குறைய 30 முதல் 40 பேர் ஆலயத்தின் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்,'' என்று சுப்பிரமணியம் குப்புசாமி தெரிவித்தார். 

இவ்வாண்டைவிட அடுத்த ஆண்டில் அறுவடை சிறப்பாக அமையப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் இக்கொண்டாட்டம் தொடங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, புதிய இயல்பு முறையில் பொங்கல் கொண்டாடப்படுவதால் ஆலயங்களுக்கு அதிகமானோர் செல்ல முடியாத காரணத்தினால், தாங்கள் வீட்டிலிருந்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்வதாகவும் சிலர் கருத்துரைத்தனர்.

இந்நன்நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அன்பையும் பெருக செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க