கோலாலம்பூர், 11 ஜனவரி (பெர்னாமா) -- பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெறவிருப்பதாகவும் துணைப் பிரதமர் ஒருவரை நியமிக்கவிருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை, மாறாக தீய நோக்கம் கொண்டதாகும்.
முகிடின் புற்று நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டார் என்று அவருக்க்ச் சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாகப் பிரதமர் அலுவலம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், துணைப் பிரதமராக ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பரவி வரும் தகவலையும் பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
முன்னதாக, சிங்கப்பூரில் முகிடின் சிகிச்சை பெறவிருப்பதால் துணை பிரதமாக அமைச்சரவை உறுப்பினர் ஒருவரை நியமிப்பார் என்று ஓர் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
--பெர்னாமா
எங்களைப் பற்றி
Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia
Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com
பிரிவுகள்
• பொது
• அரசியல்
• உலகம்
• சிறப்புச் செய்தி
• விளையாட்டு
காப்புரிமை