விளையாட்டு

இங்கிலாந்து கிண்ணம்: நியூகாஸ்சலைத் தோற்கடித்தது அர்செனல்

10/01/2021 07:47 PM

இங்கிலாந்து, 10 ஜனவரி (பெர்னாமா) -- சனிக்கிழமை இரவு நடைபெற்ற இங்கிலாந்து FA கிண்ண ஆட்டம் ஒன்றில் நடப்பு வெற்றியளரான அர்செனல் 2-0 என்ற கோல்கள் எண்ணிக்கையில் நியூகாஸ்சலைத் தோற்கடித்தது.

விருவிருப்பாகத் தொடங்கிய இவ்வாட்டத்தில் இரு குழுக்களும் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காமல் முதல் பாதி ஆட்டம் கோல்கள் ஏதும் இன்றி முடிவுற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் கோல்கள் ஏதும் போடப்படாததால் கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட அர்செனல் 109 மற்றும் 117 நிமிடங்களில் இரு கோல்களை அடித்து ஆட்டத்தைத் தன் வசம் ஆக்கிக் கொண்டது.

இதனிடையே, மென்சஸ்டர் யுனைடெட்டிற்கும் வாட்ஃபோர்ட்க்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஐந்தாவது நிமிடத்தில் போடப்பட்ட ஒரே கோல், மென்சஸ்டர் யுனைடெட்டிற்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

-- பெர்னாமா