Thursday, 21 Jan 2021
அரசியல்
08/01/2021 06:59 PM

புத்ராஜெயா, 08 ஜனவரி (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது தொடர்பான வாதங்கள் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல.

ஏனெனில், அந்நாடுகளின் தேர்தல் சிறிய அளவில் நடத்தப்பட்டதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

ஆகவே, தற்போதைய கொவிட்-19 நோய்த் தொற்றுகள் குறித்த தரவுகளைப் பரிசீலித்ததில் 15-வது பொது தேர்தல் நடத்தப்பட்டால் அது பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

சபா மாநில தேர்தலில் அரசியல்வாதிகள் செயல்பாட்டுத் தர விதிமுறையான எஸ்.ஒ.பி.முறையாகப் பின்பற்ற தவறியதைக் கைரிசுட்டிக் காட்டினார்.

முன்னதாக, 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிக்குள் 15-வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற ஒரு தீர்மானத்தை அம்னோ கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க