உலகம்

புரெவி புயலால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

04/12/2020 04:43 PM

சென்னை, இந்தியா, 04 டிசம்பர் (பெர்னாமா) -- இலங்கையைக் கடந்து, தமிழகம் வந்திருக்கும் புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு வரை மிதமான அளவில் பெய்த மழை, இன்று அதிகாலை தொடங்கி, கனமழையாகப் பெய்ய தொடங்கியிருக்கிறது.

கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் அதிகம் தண்ணீர் தேங்க்கத் தொடங்கி இருக்கின்றன. அதோடு, சாலைகளில் அதிகமான வெள்ள நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்ததால், இந்த கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தப் புரெவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமாநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர்புயல் கரையைக் கடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், புரெவி புயல் காரணமாக மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

-- பெர்னாமா