பொது

கொவிட்-19: சிங்கப்பூரில் இறுதி திரள் நிறைவடைந்தது

25/11/2020 12:08 PM

சிங்கப்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- சிங்கப்பூரில் இதுவரை 58, 183 கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில், அந்நாட்டில் ஊழியர் தங்கும் இடத்தில் பதிவு செய்யப்பட்ட இறுதி திரள் நேற்று, செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 28 நாட்களாக Cassia@Penjuru திரள் தொடர்பாக எந்தவொரு நோய்ச் சம்பவங்களும் பதிவாகாததைத் தொடர்ந்து, இந்த திரள் நிறைவடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்தது.

''இந்த திரள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இவ்வாண்டில் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வந்த கொவிட்-19 தொடர்பாக, எந்தவொரு திரளும் இல்லை,'' என்று நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீன மருந்து கடை ஒன்றை உட்படுத்தி கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி சிங்கப்பூரில் முதல் திரள் பதிவாகியது.

சிங்கப்பூரில், பதிவாகிய கொவிட்-19 சம்பவங்களில் 1,410 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியதாகவும், 2,271 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகவும் 54,502 சம்பவங்கள் தங்கும் விடுதிகளை உட்படுத்தியதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு வகைப்படுத்தியுள்ளது.

அதில், 99 விழுக்காட்டினர் அதாவது 58,079 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.

37 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அந்நாட்டில், கொவிட்-19 நோயினால் இதுவரை 28 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

நேற்று, செவ்வாய்க்கிழமை 18 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகிய வேளையில், அந்நாட்டில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் உள்நாட்டினரிடையே இந்நோய்ப் பரவவில்லை.

-- பெர்னாமா