விளையாட்டு

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டி

24/11/2020 02:52 PM

இங்கிலாந்து, கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா)-- நாளை அதிகாலை நடைபெறவிருக்கும் குழு பிரிவு ஆட்டத்தில், இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட், இஸ்தான்புலின் பாசாக் செஹிர் அணியுடன் களம் காணவிருக்கின்றது. 

நான்கு அணிகள் இடம் பெற்றிருக்கும் எஹ்ச் பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் யுனைடெட் இம்முறை தனது சொந்த அரங்கில், விளையாடுவதால் அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. 

எனவே, அதற்கான பயிற்சியில் அது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பிரான்ஸ்

இதனிடையே, அதே குழுவில் இருக்கும் ஜெர்மனியின் ஆர்.பி லெய்ப்சிக்கும் பிரான்சின் பி.எஸ்.ஜியும் சந்திக்க விருக்கின்றன. 

புள்ளிப்பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருக்கும், லெய்ப்சிக் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்கில், புதிய வியூகத்தை வகுத்துள்ளது.

அதேவேளையில், ஆர்.பி லெய்ப்சிக்கைத் தோற்கடிக்கும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கு அதிகமாக இருப்பதாக, பி.எஸ்.ஜி அணி கூறியுள்ளது. 

கிலியான் எம்பாப்பே மற்றும் நெய்மார் போன்ற முன்னணி ஆட்டக்காரர்கள் இம்முறை களமிறங்கவிருப்பதால்,  வெற்றிப் பெறுவதில் அவ்வணி திடமான நம்பிக்கையோடு உள்ளது. 

-- பெர்னாமா