அரசியல்

நாட்டில் 15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்

23/11/2020 08:29 PM

நாடாளுமன்றம், கோலாலம்பூர், 23 நவம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியப் பின்னர், நாட்டின் 15 வது பொதுத் தேர்தல் மேற்கொள்ளப்பட்டால், அதனை எதிர்கொள்ளவதற்கு துள்ளியமான திட்டங்களை தேர்தல் ஆணையம் வரைந்து வருகிறது.

பாதுகாப்பான மற்றும் முறையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் இத்திட்டங்களில் இடம்பெறும் என்று, நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பிரிவுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தாக்கியுடின் ஹாசான் தெரிவித்திருக்கிறார்.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகிய தரப்புகளுடன் இணைந்து தேர்தல் ஆணையம், பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தலை நடத்துவதற்கான, கொவிட் -19 தடுப்பு வழிகாட்டுதலை தயார் செய்திருப்பதாக டத்தோ தாக்கியுடின் ஹாசான் கூறினார்.

தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை உட்பட, பல முக்கியமான கூறுகள் இந்த கொவிட் -19 தடுப்பு வழிகாட்டுதலில் இடம் பெற்றிருப்பதாக தாக்கியுடின் தெரிவித்தார்.

திங்கட்கிழமை நடைபெற்ற மக்களைவை விவாத்தின் போது, தாக்கியுடின் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா