Tuesday, 24 Nov 2020
பொது
22/11/2020 07:57 PM

சிக்(கெடா), 22 நவம்பர் (பெர்னாமா) --கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த  நிர்ணயிக்கப்பட்டுள்ள செயல்பாட்டு தரவிதிமுறை எஸ்.ஓ.பி குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே இருந்தால் அது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை எளிமையாக்கும்.

மேலும், வெள்ள நிவாரண மையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி  பின்பற்றப்பட வேண்டும் என்று மலேசிய பொது தற்காப்புப் படையின் தலைமை ஆணையர் டத்தோ ரோஸ்லான் வாஹப் தெரிவித்திருக்கிறார்.

கெடா, சிக்-கில் புதிய இயல்பில் வெள்ளப் பிரச்சனையைக் கையாளுவது தொடர்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறிய மண்டபங்களில் அதிகமான பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்கும் போது, எஸ்.ஓ.பி முறையாக பின்பற்றப்படாத சாத்தியமும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டின்னார்.

நாடு முழுவதிலும் வெள்ளப் பிரச்சனை ஏற்பட்டால் அதனை கையாளுவதற்கு இருபதாயிரத்திற்கும் அதிகமான தன்னார்வாளர்களும் உபகரணங்களும் தயார்நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க