Friday, 27 Nov 2020
பொது
22/11/2020 06:12 PM

புத்ராஜெயா, 22 நவம்பர் (பெர்னாமா) --நடமாட்டக் கட்டுப்பட்டு உத்தரவு PKP-யை மீறியக் குற்றத்திற்காக நேற்று சனிக்கிழமை 381 கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில்,  377 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், எஞ்சிய நால்வர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

மனமகிழ்வு மைய நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சுவாசக் கவசம் அணியாதது, தொடுகை இடைவெளியைப் பின்பற்றாதது, வாடிக்கையாளர்களுக்கு சுய விவரக் குறிப்புக் கருவிகளை தயார் செய்து வைக்காதது, PKPB பகுதிகளில் மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்து சென்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, OP BENTENG நடவடிக்கையின் மூலம், நடத்தப்பட்ட 278 சாலைத் தடுப்பின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 20 சட்டவிரோதக் குடியேறிகளையும், மூன்று கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதோடு ஒன்பது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக  இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

ஒன்பது சிவப்பு மண்டலம், மூன்று ஆரஞ்சு மண்டலம், ஆறு மஞ்சள் மண்டலம், ஒன்பது பச்சை மண்டலம் உட்படுத்தி 35 கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க