Friday, 27 Nov 2020
22/11/2020 03:16 PM

ஜோகூர் பாரு, 22 நவம்பவர் (பெர்னாமா) -- ஜோகூரில் தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையினால் அம்மாநிலத்திலுள்ள இரண்டு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், 40 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும், இன்று காலை எட்டு மணி வரையில் பொந்தியான் மற்றும் ஜோகூர் பாருவில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழு தலைவர் ஆர்.வித்யாநந்தன் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் பாதிக்கப்பட்ட கம்போங் பாசீர், கம்போங் ஶ்ரீ செர்டாங், கம்போங் பெங்காலான் ரிந்திங் மற்றும் கம்போங் ஶ்ரீ ஜெயாவைச் சேர்ந்த 36 குடும்பங்களை உட்படுத்தி 144 பேர் கம்போங் பாசீர் தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பொந்தியானில் பாதிக்கப்பட்ட கம்போங் உலு பூலாய்யைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார்.

அம்மாநிலத்தில் ஏற்பட்டு வரும் வெள்ள நிலவரம் குறித்து கண்காணிப்பதோடு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவியை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க