Friday, 27 Nov 2020
சிறப்புச் செய்தி
20/11/2020 08:16 PM

கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியம் காவல் துறையின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான துணை ஆணையர் டி.சி.பி பதவியை ஏற்கிறார்.

அடுத்த மாதம் டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கி இப்பொறுப்பேற்கும் இவர், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத்துறை துணை இயக்குநராகவும் பொறுப்பேற்கிறார்.

டி.சி.பியாக ஓர் இந்திய பெண் பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.

புக்கிட் அமான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரிகள் தொடர்பான பதவி உயர்வையும் இடமாற்றத்தையும் அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

கடந்த 31 ஆண்டு காலமாக காவல்துறையில் பணியாற்றி வந்த தமது, திறமையையும் சேவையும் கண்டு இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளதாக டத்தோ சசிகலா தேவி 

தமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

அவரின் இந்தப் பதவி உயர்வு இந்திய சமுதாயத்திற்கும் பெருமைத் தேடித் தந்துள்ளது.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க