Friday, 27 Nov 2020
அரசியல்
16/11/2020 06:07 PM

கோலாலம்பூர், 16 நவம்பர் (பெர்னாமா) -- வெளிநாடுகளில் இருக்கும் ஐந்து மலேசிய கல்வி அலுவலகங்களை மூடுவதற்கு அரசாங்கம் பரிந்துரைத்திருக்கிறது. அந்த ஐந்து அலுவலகங்கள், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் லோஸ் ஏஞ்சல்ஸ் நியூசிலாந்தின், வெல்லிங்டன், வியட்நாமின் ஹொ சி மின், ஆஸ்திரேலியாவின் பெர்த் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மலேசியாவிற்கு வரும் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை, கல்வி உதவி நிதி மற்றும் நாட்டின் வருமானம் ஆகியவற்றுக்கு இந்த அலுவலகங்கள் இனி பங்களிக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உயர்கல்வி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ மன்சூர் ஒத்மான் தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் மலேசிய கல்வி அலுவலகங்களின் செயல்பாடு குறித்து சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மாஸ்லி மாலிக் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ மன்சூர் இவ்வாறு பதலளித்தார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க