2021 வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படாவிட்டால் ஊதியம் வழங்குவதில் சிக்கல்

14/11/2020 05:24 PM

கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களவையில் அங்கீகரிக்கப்படாவிட்டால் கொவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கிய பங்காற்றும் முன்னிலை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துவதையும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதால், அதற்கும் நிராகரிக்கப்படுவதற்கான எந்தவொரு காரணமும் கிடையாது என்று நிதி அமைச்சர்  தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.

''பொருளாதார ரீதியில் நாங்கள் அரசாங்கத்தின் அதிக பொறுப்புகளுக்கு கட்டணம் செலுத்தவில்லை. ஏனென்றால் இந்த வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்படாவிட்டால் அரசாங்கத்தின் பொறுப்புகளான முன்னிலை பணியாளர்களின் ஊதியம், மக்கள் பரிவுமிக்க உதவித் தொகை ஆகியவையை வழங்க முடியாது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற இயங்கலை வழி வழங்கிய சிறப்பு நேர்காணாலின்போது தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் இதனைத் தெரிவித்தார்.

2021 வரவு செலவு திட்டத்தில், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு செலவுகளை அதிகம் கொண்டிருப்பதால் அது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அதோடு, அதில் ஊதியம் வழங்குவதற்கான ஒதுக்கீடுகளும் உட்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

-- பெர்னாமா