பொது

கொவிட்-19: இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000ஆக பதிவு

31/10/2020 07:41 PM

புத்ராஜெயா, 31 அக்டோபர் (பெர்னாமா) -- கொவிட்-19 சம்பவங்கள் நாட்டில் பரவத் தொடங்கியது முதல், இன்று முதன் முறையாக அதிகமானோர் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

இன்று மட்டும் 1000 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்திருக்கும் நிலையில், இதன் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 248ஆக பதிவாகியிருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று சனிக்கிழமை புத்ராஜெயாவில், நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இன்று 659 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகிய நிலையில், அதில் 658 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும்.

எஞ்சிய ஒரு சம்பவம் வங்காளதேசத்திலிருந்து நாடு திரும்பியவரை உட்படுத்தியது என்று அவர் கூறினார்.

இன்று எந்தவொரு புதிய தொற்றுகளும் பதிவாகவில்லை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.

தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 83 பேரில் 19 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று கொவிட்-19 நோயினால் எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகாததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 49 ஆக நீடிக்கிறது.

-- பெர்னாமா