கொவிட்-19: 799 சம்பவங்களுடன் மூன்று மரணங்கள் பதிவு

30/10/2020 07:35 PM

புத்ராஜெயா, 30 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில் இன்று, கொவிட்-19 நோயினால், மேலும் மூன்று மரணச் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து அந்தப் பெருந்தொற்றுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 249- ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில், நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில், சிலாங்கூர், சபா, லாபுவான், நெகரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களை உட்படுத்தி 8 புதிய கொவிட்-19 தொற்றை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகிய 799 புதிய சம்பவங்கள் அனைத்தும் உள்நாட்டில் பரவியதாகும் என்று அவர் கூறினார்.

அதில், சபாவில் பதிவாகிய 466 சம்பவங்களில், 56 சம்பவங்கள் நடப்பில் இருக்கும் தொற்றுகளில் இருந்து பரவியது என்றும் 70 சம்பவங்கள் மூன்று புதிய தொற்றுகளில் இருந்து பரவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சிலாங்கூரில் பதிவாகிய 150 சம்பவங்களில், 40 சம்பவங்கள் நடப்பில் இருக்கும் தொற்றுகளிலும், 76 சம்பவங்கள் இரண்டு புதிய தொற்றுகளிலும் இருந்து பரவியிருக்கிறது.

அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 90 பேரில் 20 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா